தூத்துக்குடியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி தங்கியுள்ள வீட்டில் வருமான வரித்துறை சோதனை; மு.க. ஸ்டாலின்
தூத்துக்குடியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி தங்கியுள்ள வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
தூத்துக்குடி,
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி போட்டியிடுகிறார். இதற்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அவர் அங்குள்ள வீடு ஒன்றில் தங்கி உள்ளார்.
இந்நிலையில், அவர் தங்கியுள்ள வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, தி.மு.க. மீது களங்கம் ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டு வேலூர் மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இங்கு ஜனநாயக படுகொலை நடந்திருக்கிறது. தேர்தலை சீர்குலைக்க பிரதமர் மோடி திட்டமிட்டு உள்ளார் என கூறினார். ஆனால், மாவட்ட ஆட்சியரின் தகவலின்பேரில் சோதனை நடத்தப்படுகிறது என வருமான வரித்துறை தெரிவித்து உள்ளது.
தொடர்ந்து ஸ்டாலின், தமிழிசை சௌந்தரராஜன் வீட்டில் கோடி கோடியாக பணம் இருப்பதாகவும் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.