தமிழகத்தின் தேர்தல் டி.ஜி.பி.யாக அசுதோஷ் சுக்லா நியமனம்

தமிழகத்தின் தேர்தல் டி.ஜி.பி.யாக அசுதோஷ் சுக்லா நியமனம்;

Update:2019-04-10 23:11 IST
சென்னை, 

தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதன்காரணமாக தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து உள்ளது.

இந்தநிலையில் தமிழக சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்து வரும் அசுதோஷ் சுக்லாவை தமிழக தேர்தல் டி.ஜி.பி.யாக நியமித்து இந்திய தேர்தல் ஆணையம்  உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேர்தல் பிரசாரத்தின் போதும், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கையின் போது ஏற்படக்கூடிய சட்டம்–ஒழுங்கு பிரச்சினை, தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடு போன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளையும் தேர்தல் முடிவடையும் வரை டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா தான் மேற்கொள்வார் என்றும், தேர்தல் பிரச்சினைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட போலீஸ் அதிகாரிகளும் அசுதோஷ் சுக்லாவை தான் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும் என்றும், தேர்தல் தொடர்பான விவகாரங்களில் தமிழக டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் தேர்தல் முடியும் வரை தலையிடக்கூடாது என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை தொடர்ந்து 11-ம் தேதி (வியாழக்கிழமை) மதியம் 1 மணிக்கு அசுதோஷ் சுக்லா தேர்தல் டி.ஜி.பி.யாக பொறுப்பேற்றுக்கொள்கிறார். சென்னையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் இவருக்கு தனியாக அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்