சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ஒரு கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பினாகினி விரைவு ரெயிலில் இருந்து ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-04-03 10:32 GMT
சென்னை,

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பினாகினி விரைவு ரெயிலில்  சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த ஆனந்த் என்பவரிடம், ஒரு கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விஜயவாடாவில் இருந்து சென்னை வந்த விரைவு ரெயில் பயணியிடம் இருந்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிதல் செய்யப்பட்ட தங்க்கட்டிகளை தேர்தல் பறக்கும் படையினரிடம் ரெயில்வே போலீசார் ஒப்படைத்தனர். இதுகுறித்து  தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்