விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி காரில் ரூ.2.10 கோடி பறிமுதல்
விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி காரில் ரூ.2.10 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே பேரளி டோல்வே பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் காவல்துறையை சேர்ந்த குழுவினர் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, திருச்சியில் இருந்து வந்த காரை சோதனை செய்தபோது, கோடிக்கணக்கில் பணம் மறைத்துக் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் குன்னம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோர் முன்னிலையில், வாகனத்தை சோதனையிட்டதில் வாகனத்தில் பல்வேறு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கோடியே 10 லட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டது.
பணத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி தங்கதுரை மற்றும் அவருடன் சேர்ந்த 3 பேர் திருச்சியில் இருந்து கொண்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.