அ.தி.மு.க. கூட்டணி மங்களகரமானது; தி.மு.க. கூட்டணி மங்கிப்போனது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு
சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் கிராமத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் கிராமத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசியதாவது:-
நாடாளுமன்ற தேர்தல் தேதி வருகிற 10-ந்தேதிக்குள் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. நாங்கள் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கி விட்டோம். அ.தி.மு.க. அணி மங்களகரமான கூட்டணி. தி.மு.க. அணியோ மங்கிப்போன கூட்டணி. ஏன் இப்படி சொல்கிறேன் என்றால், ஸ்டாலினை, வைகோ என்னவெல்லாம் பேசினார் என்பது இந்த நாட்டு மக்களுக்கு தெரியும். கவுன்சிலர் தேர்தலில் கூட மு.க.ஸ்டாலினை வெற்றிபெற விடமாட்டேன் என்றார். இதை நீங்கள் சமூக வலைத்தளங்களில் பார்க்கலாம். ஆனால் அதே வைகோ இன்று ஸ்டாலினை முதல்-அமைச்சர் பதவியில் அமர வைத்தே தீருவேன், என்கிறார். தி.மு.க. ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.