அண்ணா நினைவிடத்தில் பழனிசாமி, பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி

சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதல்-அமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.

Update: 2019-02-03 05:25 GMT
சென்னை,

தமிழகத்தின் முன்னாள் முதல் அமைச்சரான பேரறிஞர் அண்ணாவின் 50வது நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. அவரது பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் உள்ள  நினைவு இல்லத்தில் சிலைக்கு, பல்வேறு கட்சியினர் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்தும் மலர் தூவியும், மரியாதை செலுத்தினர். தமிழக அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதல்-அமைச்சர் பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். 

அதிமுக மூத்த நிர்வாகிகள் மதுசூதனன், கே.பி.முனுசாமி, பொன்னையன், அமைச்சர்கள், எம்.பிக்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். அண்ணாவின் 50-வது நினைவுதினத்தையொட்டி அதிமுக சார்பில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்