பொன் மாணிக்கவேலுக்கு அளித்த வசதிகள் பற்றிய அறிக்கை: டி.ஜி.பி. நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் ஐகோர்ட்டு எச்சரிக்கை

டி.ஜி.பி.யை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று ஐகோர்ட்டு எச்சரிக்கை நீதிபதிகள் எச்சரித்தனர்.;

Update:2019-02-02 04:30 IST
சென்னை,

சிலை கடத்தல் தொடர்பான வழக்கு ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு செய்துகொடுக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்வதற்கு அரசு தரப்பில் ஒருவார அவகாசம் கேட்கப்பட்டது.

இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ‘தொடர்ந்து காலஅவகாசம் கோருவது நீதிமன்ற அவமதிப்பாகும். ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் டி.ஜி.பி.யை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்’ என்று எச்சரித்தனர். பின்னர் நீதிபதிகள், “சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு 104 போலீசார் நியமிக் கப்பட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. அதைக்கூட ஐகோர்ட்டில் அறிக்கையாக போலீசார் தாக்கல் செய்யவில்லை” என்று கண்டனம் தெரிவித்து விசாரணையை 7-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

மேலும் செய்திகள்