டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் சர்வதேச கைப்பந்து கழக நிர்வாகி அஞ்சலி

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில், சர்வதேச கைப்பந்து கழகத்தின் செயல் துணைத்தலைவர் ஈசா ஹம்சா அஞ்சலி செலுத்தினார்.

Update: 2019-01-02 23:00 GMT

சென்னை,

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில், சர்வதேச கைப்பந்து கழகத்தின் செயல் துணைத்தலைவர் ஈசா ஹம்சா அஞ்சலி செலுத்தினார்.

நினைவு இல்லம்

மறைந்த ‘தினத்தந்தி’ அதிபர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லம் சென்னை போயஸ்கார்டனில் அமைந்துள்ளது. அவருடைய நினைவு இல்லத்துக்கு குவைத் நாட்டை சேர்ந்த சர்வதேச கைப்பந்து கழகத்தின் செயல் துணைத்தலைவர் ஈசா ஹம்சா நேற்று வந்தார்.

அங்கு அவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

புகைப்படங்கள்

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பத்திரிகை, கல்வி, ஆன்மிகம், விளையாட்டு மற்றும் பொதுசேவைகளில் செய்த சாதனைகளை பறைசாற்றும் வகையில் நினைவு இல்லத்தில் இடம் பெற்றுள்ள புகைப்படங்களையும், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பெற்ற ‘பத்மஸ்ரீ’ பட்டம், விளையாட்டுத்துறையில் பெற்ற விருதுகள் போன்றவற்றையும் ஈசா ஹம்சா பார்வையிட்டார்.

சுமார் 30 நிமிடங்கள் வரை நினைவு இல்லத்தில் இருந்த ஈசா ஹம்சா, டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருடன் தான் பழகியதை நினைவுகூர்ந்து, அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

மேலும் செய்திகள்