அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னை:
சென்னை வானிலை மைய இயக்குனர் பாலகிருஷ்ணன் கூறி இருப்பதாவது:-
தென்மேற்கு வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வுநிலை நிலவி வருகிறது. இதனால் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு .நாளை மீனவர்கள் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என கூறி உள்ளார்.