நெல்லை எக்ஸ்பிரஸ் நாளை முதல் அதிநவீன ரெயில் பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது

நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நாளை முதல் அதிநவீன பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.

Update: 2018-08-31 22:45 GMT
சென்னை,

தெற்கு ரெயில்வேயில் உள்ள எக்ஸ்பிரஸ் ரெயில்களில் நீல நிறத்திலான பழைய ரெயில் பெட்டிகளை படிப்படியாக மாற்றி விட்டு சிவப்பு நிறத்திலான அதிநவீன ரெயில் பெட்டியான எல்.எச்.பி. பெட்டிகள் பொருத்தி இயக்க தெற்கு ரெயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நாளை (ஞாயிறு) முதல் அதிநவீன பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தெற்கு ரெயில்வேயில் உள்ள ரெயில்களில், ஐ.சி.எப். தயாரிப்பிலான பழைய ரெயில் பெட்டிகளை மாற்றி அதிநவீன பெட்டியான எல்.எச்.பி. பெட்டிகள் பொருத்தப்பட்டு வருகின்றன.

நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் அதிநவீன ரெயில் பெட்டிகளுடன் சென்னை எழும்பூர்-நெல்லை-சென்னை எழும்பூர் (வண்டி எண்:12631/12632) நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.

வரும் 4-ந்தேதி முதல் எழும்பூர்-செங்கோட்டை-எழும்பூர்(12661/12662) பொதிகை எக்ஸ்பிரசிலும் அதிநவீன பெட்டியான எல்.எச்.பி. பெட்டிகள் பொருத்தப்பட்டு இயக்கப்பட உள்ளன.

இந்த ரெயில்களில் 2 அடுக்கு வசதி கொண்ட குளிர்சாதன பெட்டி ஒன்றும், 3 அடுக்கு வசதி கொண்ட குளிர்சாதன பெட்டிகள் 6, படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் 11, பொது பெட்டிகள் 3, 2 ஜெனரேட்டர் பெட்டிகள் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்