ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிகளுக்கு தடை விதித்தது ஐகோர்ட் மதுரை கிளை
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கப் பணிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. #ThoothukudiShooting #SterliteProtest #sterlitekillsthoothukudi
மதுரை
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், போராட்டக்காரர்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியது.
இந்த சம்பவம் நாடெங்கும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையின் 2-வது பிரிவின் விரிவாக்கத்திற்கு எதிராக பாத்திமா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். ஆலை விரிவாக்கம் தொடர்பாக பொதுமக்களின் கருத்தையும் நிர்வாகம் கேட்கவில்லை என்றும் மனுவில் கூறியிருந்தார்.
இவ்வழக்கின் வாதப்பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கப் பணிகளை நிறுத்தும்படி நீதிபதிகள் சுந்தர், அனிதா சுமந்த் இன்று உத்தரவிட்டனர். மேலும், ஆலையை நடத்துவதற்காக சுற்றுச்சூழல் அனுமதி கோரும் வேதாந்தா நிறுவனத்தின் மனுவை மத்திய அரசு பிரிசீலித்து 4 மாதங்களில் முடிவு செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.