தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி -சென்னை வானிலை மையம்
தென்தமிழகம், வடதமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை:
வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மண்டலாமாக மாற வாய்ப்புள்ளதால் அடுத்த 2 நாட்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் .
தென்தமிழகம், வடதமிழகத்தின் உள் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு