தனியார் துறைமுகத்திற்கு முதலமைச்சர் நாராயணசாமி எச்சாிக்கை
பொதுமக்களை பாதிக்கும் வகையில் நிலக்கரி இறக்குமதி செய்தால் கடும் நடவடிக்கை என்று தனியார் துறைமுகத்திற்கு நாராயணசாமி எச்சாித்துள்ளாா். #Narayanasamy
புதுச்சோி,
காரைக்கால் தனியார் துறைமுகத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நிலக்கரி இறக்குமதி செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சோி முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளாா்.
மேலும், முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில்,
மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும் கலால் வரி உயர்வுக்கும், பணமதிப்பு நீக்க நடவடிக்கையே தான் காரணம் என்றாா். பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் காவிாி விவகாரத்தில் பாஜகவுடன் சோ்ந்து புதுச்சோி முன்னாள் முதல்வா் ரங்கசாமி நாடகமாடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளாா். இவ்வாறு அவா் கூறினாா்.