கமல் கட்டெறும்பிலிருந்து சிற்றெறும்பாகி பின்னர் அரசியலில் காணாமல் போய் விடுவார் - அமைச்சர் ஜெயக்குமார்
கமல் கட்டெறும்பிலிருந்து சிற்றெறும்பாகி பின்னர் அரசியலில் காணாமலே போய் விடுவார் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #Jayakumar #KamalHassan
சென்னை
தமிழக அரசின் சார்பாக கவிஞர் இளங்கோ அடிகளின் சிலைக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் நிருபர்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
கமல் எங்கே இருக்கிறார்? அவர் திடீரென்று ட்விட்டரில் வருவார். இல்லை என்றால் பேஸ்புக்கில் வருவார்; யூட்யூபில் வருவார். பார்த்துக் கொண்டே இருங்கள். இனிமேல் எஸ்.எம்.எஸ்ஸில் தான் வருவார்.
சுருக்கமாக சொல்வதென்றால் என்னமோ தேய்ந்து கட்டெறும்பு ஆனது என்பார்களே. அதுபோல கமல் கட்டெறும்பிலிருந்து சிற்றெறும்பாகி பின்னர் அரசியலில் காணாமலே போய் விடுவார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என்ற நம்பிக்கை உள்ளது, நிச்சயம் வெற்றி பெறுவோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அரசியல் நெருக்கடி கொடுத்து வருகிறோம். கூட்டணி குறித்து உரிய நேரத்தில் கட்சி தலைமை முடிவெடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.