சல்மான்கானுக்கு எதிராக நடைபெறும் வழக்கு விசாரணைகளுக்கு சுப்ரீம் கோர்ட் தடை
சாதிய உணர்வை புண்படுத்தியதாக சல்மான்கானுக்கு எதிராக நடைபெறும் வழக்கு விசாரணைகளுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. #SupremeCourt #SalmanKhan
புதுடெல்லி,
கடந்த ஆண்டு இறுதியில் வெளியான டைகர் ஜிந்தா ஹை பட புரோமஷன் நிகழ்ச்சியின் போது வால்மீகி சாதிய மக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் நடிகர் சல்மான் கான் பேசியதாக கடும் எதிர்ப்பு எழுந்தது.
சல்மான்கானுக்கு எதிராக பெரிய அளவில் அப்போது, போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சல்மான்கானுக்கு எதிராக டெல்லி, குஜராத், ராஜஸ்தான், மும்பை ஆகிய மாநிலங்களில் கிரிமினல் வழக்குகளும் தொடரப்பட்டது.
இந்த நிலையில், சல்மான்கான், தரப்பில் சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், நாடு முழுவதிலும் உள்ள ஆறு மாநிலங்களில் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளுக்கு தடை விதித்துள்ளது.
வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் ஜூலை 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த சுப்ரீம்கோர்ட், சல்மான்கானுக்கு எதிராக பதியப்பட்டுள்ள எப்.ஐ.ஆர். ரத்து செய்யலாமா? அல்லது வேண்டாமா? என்பது குறித்து விசாரிக்க உள்ளது.