குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் - விஷால்

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என விஷால் கூறிஉள்ளார்.

Update: 2018-04-20 13:54 GMT

சென்னை,

வள்ளுவர்கோட்டத்தில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் விஷால் பேசுகையில், குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களை தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும் பள்ளிகளில் குழந்தைகளுக்கு கட்டாயமாக தற்பாதுகாப்பு பயிற்சி வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார். 

மேலும் செய்திகள்