ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டுமானால்தேர்தல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் டாக்டர் ராமதாஸ் அறிக்கை
ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் கலாசாரம் எனக்குத்தெரிந்து, 55 ஆண்டுகளுக்கு முன் 1962-ம் ஆண்டு தேர்தலில் அண்ணா போட்டியிட்ட காஞ்சீபுரம் தொகுதியிலேயே தொடங்கி விட்டது. எனினும் அப்போது ஓட்டுக்குப் பணம் தருவது இலைமறை காய்மறையாகவே நடைபெற்று வந்தது. ஆனால், இப்போது வெளிப்படையாகவே பண வினியோகம் நடந்திருக்கிறது.
ஆளும்கட்சியின் சார்பில் ஒரு ஓட்டுக்கு ரூ.6,000 வீதம் ஒரே நாளில் ரூ.120 கோடி வினியோகிக்கப்பட்டிருக்கிறது. சில வாரங்களுக்கு முன் வரை ஆளுங்கட்சியின் அதிகார மையமாக விளங்கி, சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர் பொதுவானவர்களுக்கு ரூ.8000 வீதமும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிவினருக்கு ரூ.12,000 வீதமும் வாரி இறைத்திருக்கின்றனர். ஆண்ட கட்சி சார்பிலும் ஒரு ஓட்டுக்கு ரூ.2000 முதல் 3000 வரை வினியோகம் செய்யப்பட்டிருக்கிறது. 10 தேர்தல் பார்வையாளர்கள் இருந்தாலும் பண வினியோகம் தடுக்கப்படவில்லை.
இதேநிலை இனிவரும் தேர்தல்களிலும் தொடர்ந்தால் ஜனநாயகம் என்பதற்கு அர்த்தமில்லாமல் போய் விடும். இந்தியாவில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டுமானால் உடனடியாக தேர்தல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுத்தது நிரூபிக்கப்பட்டால் தேர்தல் ஒத்திவைக்கப்பட வேண்டும். எத்தனை முறை பணம் கொடுக்கப்பட்டாலும் தேர்தல் ஒத்திவைக்கப்பட வேண்டும்.
ஓட்டுக்கு பணம் கொடுத்த வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும். 10 விழுக்காட்டுக்கும் கூடுதலான தொகுதிகளில் ஒரு கட்சி சார்பில் பணம் வினியோகிக்கப்பட்டால் அந்தக் கட்சியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இதற்கேற்ற வகையில் சட்டத் திருத்தங்களை செய்ய தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் நடப்புக்கூட்டத் தொடரில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.