திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு கருணாநிதி சென்றார்
திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு கருணாநிதி வருகை புரிந்தார்.
சென்னை,
திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு கருணாநிதி சென்றார்.
திமுக தலைவர் கருணாநிதியுடன் செயல் தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், ஆ.ராசா உள்ளிட்டோர் அண்ணா அறிவாலயம் சென்றனர். உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த கருணாநிதி உடல் நலம் தேறிவருகிறார். தலைவர் கருணாநிதி நீண்ட நாட்களுக்கு பின் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்ததால், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர். அண்ணா அறிவாலயத்தில் சுமார் 20 நிமிடங்கள் இருந்துவிட்டு கருணாநிதி கோபாலபுரம் வீட்டிற்கு திரும்பி சென்றார். திமுக தொண்டர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை தெரிவித்து வருகிறார்கள்.
அண்ணா அறிவாலயத்தில் உள்ள வருகை பதிவேட்டில் கருணாநிதி கையெழுத்திட்டார்.
ஓராண்டாக வெளி நிகழ்ச்சிகளில் எதிலும் பங்கேற்காமல் வீட்டிலேயே ஓய்வெடுத்த கருணாநிதி கடந்த அக்டோபர் மாதம் முரசொலி அலுவலகம் சென்றார். அங்கு பவள விழா கண்காட்சியை பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது திமுக தலைவர் கருணாநிதி அறிவாலயம் சென்றது தி.மு.க. தொண்டர்களிடையே புது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.