ஆணவக் கொலைகளுக்கு எதிராக அரசு சட்டம் இயற்ற வேண்டும்-சங்கர் மனைவி கவுசல்யா பேட்டி

ஆணவக் கொலைகளுக்கு எதிராக அரசு சட்டம் இயற்ற வேண்டும் என சங்கர் மனைவி கவுசல்யா கூறி உள்ளார்.;

Update:2017-12-12 15:57 IST
திருப்பூர்

உடுமலை பேட்டை சங்கர் ஆணவ கொலை வழக்கில் கவுசல்யா தாயார்  அன்ன லட்சுமி, தாய்மாமா பாண்டிதுரை,  பிரசன்னா, ஆகிய 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர். கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு இரட்டை தூக்கு தண்டனை மற்றும் ரூ. 3 லட்சம் அபராதமும்  விதிக்கபட்டது. அபராதம் கட்ட தவறினால் 10 ஆண்டு சிறை தண்டனை.

கூலிப்படையை சேர்ந்த ஐந்தாவது குற்றவாளியான மணிகண்டனுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது , ஆறாவது குற்றவாளியான செல்வகுமாருக்கும் தூக்கு தண்டனை.  சின்னசாமியின் நண்பர் ஜெகதீசனுக்கு பிரிவு 302ன் கீழ் மரண தண்டனை வழங்கப்பட்டது. மைக்கேல்,கலை தமிழ்வாணன், மதன் ஆகியோருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.  ஸ்டீபன்  தன்ராஜ் என்பவருக்கு இரட்டை ஆயுள்  தண்டனை வழங்கப்பட்டது. கவுசல்யாவின் தந்தையை  தவிர மற்ற அனைவரும் கூலிப்படையாக செயல்பட்டவர்கள்.  

தனது கணவன் சங்கர் வழக்கில் குற்றவாளிகளுக்கு அளிக்கபட்ட தண்டனை குறித்து  கவுசல்யா கூறியதாவது:-

எனது கணவர் சங்கர் சிந்திய ரத்தத்திற்கு உரிய நீதிக்கு 1.5 வருடங்களாக காத்துகிடந்தேன். இந்த தீர்ப்பு  நீதித்துறை மீது நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. சங்கர் சிந்திய ரத்தத்திற்கு நீதி கிடைத்துள்ளது வழக்கு முடியும் வரை நீதிமன்ற காவலில் வைத்திருந்தது அரிதிகும்  அரிது. 

ஜாதிய கவுரவ கொலை வழக்கிற்கு இந்த தீர்ப்பு முன்னுதாரணமாக இருக்கும். தூக்கு தண்டனை பெரும்பாலானவர்களுகு வழங்கப்பட்டுள்ளது. தூக்கு தண்டனையில் எனது கருத்து வேறாக இருப்பினும் தீர்ப்பு ஜாதி வெறியர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும். 

விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு எதிராக மேல்முறையீடு தொடர்வேன். தண்டனை கிடைத்தவர்கள் மேல்முறையீடு செய்தால், அதனை எதிர்த்து வழக்காடுவேன். 3 பேரின் விடுதலையை எதிர்த்து இறுதி வரை சட்ட ரீதியாக போராடுவேன். சங்கருக்கு உரிய நீதி இந்த வழக்கோடு முடிந்துவிடவில்லை. தனிச்சட்டம் படைப்பது தான் இந்த வழக்கிற்கு தீர்வாக அமையும் எனக்கும் சங்கரது குடும்பத்திற்கும் ஆபத்து உள்ளது. போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்