வீட்டில் இருந்தபடியே போட்டி தேர்வுகளுக்கு படிப்பதற்காக புதிய ஆண்டிராய்டு செயலி சைதை துரைசாமி தகவல்
போட்டி தேர்வுகளுக்கு படிப்பதற்காக புதிய ஆண்டிராய்டு செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ்நாட்டில் முதல் முறையாக வீட்டில் இருந்தபடியே போட்டி தேர்வுகளுக்கு படிப்பதற்காக புதிய ஆண்டிராய்டு செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.
சைதை துரைசாமியின் மனிதநேய மையம் அரசுப் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் ஏழை மாணவர்களும், கிராமப்புற மாணவர்களும் பயன்பெறும் வகையில் சேவை நோக்கோடு செயல்பட்டு வருகிறது. இதன் சார்பில் தொலைதூரத்தில் இருக்கும் மாணவர்களும், சென்னையில் இருக்கும் பயிற்சி மையத்திற்கு நேரடியாக வந்து பயன்பெற முடியாத மாணவர்களும் பயன்பெறும் வகையில் ஒரு புதிய ஆண்டிராய்டு செயலியை அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து மனிதநேய அறக்கட்டளை சார்பில் சைதை துரைசாமி கூறியதாவது:-
தமிழகத்தில் முதல் முறையாக பல்லாயிரக்கணக்கான மாணவர்களை இணைக்கும் வகையில் மிகப்பெரிய தொழில்நுட்ப பின்புலத்துடனும், வினா-விடை மட்டுமின்றி, எல்லா தளங்களிலும் மாணவர்களின் ஐயப்பாடுகளை நிவர்த்தி செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்ட இச்செயலி மிகவும் தனித்துவம் வாய்ந்தது.
பொருளாதார அடிப்படையில் மிகவும் பின்தங்கிய மாணவர்கள் சென்னை, கோவை போன்ற பெருநகரங்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களில் நேரடியாக சென்று பயிற்சி பெற மிகுந்த செலவும், குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் தேவைப்படும். அதை மனதில் கொண்டு வெளியாகியுள்ள இச்செயலி போட்டித் தேர்வுகளுக்கான தளத்தில் முதல் முறையாக பொருளாதாரப் பாகுபாட்டை நீக்க வந்த கருவியாக செயல்படும்.
இணையத்தில் உலவி வரும் மேம்போக்கான பயன்பாட்டிற்கான செயலிகள் போல் அல்லாமல், லட்சக்கணக்கானோர் உபயோகித்தாலும் எந்தவித தடையுமின்றி செயல்படும் அளவுக்கு பிரத்யேக தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது, வெளியாகியுள்ள குரூப்-4 மற்றும் வி.ஏ.ஓ.வுக்கான 9,351 பணியிடங்களுக்கு நடத்தப்படும் தமிழக அரசின் தேர்வுக்கு இலவச மாதிரி வினாத்தாள்கள் இச்செயலியில் வெளியிடப்பட்டுள்ளது. குரூப்-4 தேர்வின் பாடத்திட்டத்திற்கு ஏற்ப 20 தேர்வுகள் வடிவமைக்கப்பட்டு, அதற்கான தகுந்த கால இடைவெளிகளில் 20 தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
எப்பொழுது அடுத்தத் தேர்வுக்கான வினாத்தாள் வெளியிடப்படும் எனும் செய்தியும் இச்செயலியிலேயே அவ்வப்போது வெளியிடப்படும். மாணவர்கள் இத்தேர்வுகளை ஸ்மார்ட் போன் இருந்தாலே நினைத்த இடத்தில் எழுத முடியும். உடனுக்குடன் தங்களது மதிப்பெண்களையும், தவறாக விடையளித்த வினாக்களுக்கான சரியான பதிலையும் நிமிடத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மனிதநேய ஐ.ஏ.எஸ். அகாடமி சார்பில், தினமும் செய்தித்தாள்களில் வெளியாகும் தலையங்கங்களின் செய்திச் சுருக்கமும், தினசரி நடப்பு நிகழ்வுகளும், போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டு எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் பதிவேற்றப்படுகிறது. அதுமட்டுமின்றி, அரசு சார்பில் வெளியிடப்படும் பல காணொளிகளும், தமிழக மற்றும் இந்திய அரசின் முக்கியமான அமைச்சகங்களின் வெளியீடுகளும் அதைத் தரவிறக்கம் செய்துகொள்வதற்கான பின்னூட்டங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
மத்திய, மாநில அரசுகளின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து பாடப்புத்தகங்களையும் ஆன்லைனில் தரவிறக்கம் செய்துகொள்ளும் வசதியும் இதில் உள்ளது. போட்டித் தேர்வுகளின் பாடத்திட்டத்திற்கு ஏற்ப ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் தேவையான பாடக்குறிப்பேடுகளும், வெற்றி பெற்று பணியில் உள்ள அரசு அதிகாரிகளின், வெற்றிக்கு வழிகாட்டும் காணொளிகளும் இதில் பதிவேற்றப்பட உள்ளது.
அதுமட்டுமின்றி, அனுதினமும் மாணவர்கள் தங்களது அறிவுத்திறனை சோதித்துக்கொள்ளும் வகையில் பயிற்சித் தேர்வுகளுக்கான வினாத்தாள்களையும் இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், ஏற்கனவே எங்களது மையத்தில் படித்து வெற்றிபெற்ற மாணவர்களுடன் தற்போதைய பயனீட்டாளர்களான மாணவர்கள் கலந்துரையாடும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதன் மூலம் நேரடியாகவே மாணவர்கள் தங்களது அனைத்து குடும்பங்களுக்கும் வெற்றியாளர்களிடம் தீர்வுகளை கேட்டறியலாம். அந்த வகையில், இது ஒரு புரட்சிகரமான முன்னெடுப்பாக அமையும். மேலும், மாணவர்கள் ஒரு ஸ்மார்ட் போன் வைத்திருந்தாலே எந்தவித செலவுமின்றி இவ்வசதியை இலவசமாகப் பெறமுடியும். மாணவர்களின் இன்றைய மனவோட்டத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் மனிதநேயம் வெளியிட்டுள்ள இந்த செயலி அரசு தேர்வுகளுக்குப் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு ஒரு சிறந்த நண்பனாக அமையும்.
முதல் முதலில் போட்டித் தேர்வுக்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் முதல்படி என்னவென்றே தெரியாமல் குழம்பி நிற்கும் கல்லூரியில் பட்டம் பயிலும் மாணவர்களும் எங்கிருந்து வேண்டுமானாலும், இந்த செயலியின் உதவியுடன் போட்டித் தேர்வுகளுக்குப் படிக்கலாம். ஒரே சொடுக்கில் போட்டித் தேர்வுகளுக்கான அனைத்து தேடல்களையும் நிறைவுறச் செய்யும் அனைத்து வசதிகளும் கொண்ட இச்செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் Ma-n-i-d-h-a-n-a-ey-am IAS & IPS Fr-ee Co-a-c-h-i-ng Ce-nt-re என்ற பெயரில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
வெற்றிபெற விரும்பும் அனைத்து மாணவர்களும் இச்செயலியை பயன்படுத்தி வெற்றியாளர்களாக வலம்வர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
இவ்வாறு சைதை துரைசாமி தெரிவித்தார்.