ஓகி புயல் பாதிப்பால் மராட்டியத்தில் கரை சேர்ந்த தமிழக மீனவர்கள் 763 பேர் ஊர் திரும்புகின்றனர் பாதுகாப்புத்துறை தகவல்

ஓகி புயல் பாதிப்பால் மராட்டியத்தில் கரை சேர்ந்த தமிழக மீனவர்கள் 763 பேர் ஊர் திரும்புவதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Update: 2017-12-08 14:32 GMT
சென்னை,

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ‘ஒகி‘ புயல் காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமரி மற்றும் கேரள கடலோர பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடற்பகுதியில் மாயமாகினர். இதில் ஏராளமானோர் மீட்கப்பட்ட நிலையில், இன்னும் நூற்றுக்கணக்கான மீனவர்கள் கரை திரும்பவில்லை. அவர்களை தேடும் பணியில் கடற்படை, கடலோர காவல்படை மற்றும் விமானப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

இந்நிலையில் ஓகி புயல் பாதிப்பால் மராட்டியத்தில் கரை சேர்ந்த தமிழக மீனவர்கள் 763 பேர் ஊர் திரும்புகின்றனர். தேவ்காட், ரத்னாகிரியில் தங்கவைக்கப்பட்ட மீனவர்கள் தமிழகம் திரும்புவதாக பாதுகாப்புத்துறை தகவல் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்