திருவாரூரின் மன்னார்குடியில் திவாகரனுக்கு சொந்தமான கல்லூரியில் 3வது நாளாக வருமான வரி சோதனை

திருவாரூரின் மன்னார்குடியில் திவாகரனுக்கு சொந்தமான கல்லூரியில் 3வது நாளாக வருமான வரி சோதனை நடந்து வருகிறது.

Update: 2017-11-11 01:55 GMT
மன்னார்குடி,

சென்னையில் உள்ள ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் அலுவலகம் ஆகியவற்றில் கடந்த 9ந்தேதி வருமான வரி துறை சோதனை நடத்தியது.

இதேபோன்று சசிகலாவின் உறவினர்களான திவாகரன், விவேக், கிருஷ்ணப்ரியா ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடந்தது.

முறையாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாத நிலையில் வருமான வரி துறை சோதனை நடைபெறுகிறது. வருமான வரி ஏய்ப்பு செய்யப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று 2வது நாளாகவும் சோதனை நடைபெற்றது.

இந்த நிலையில் திருவாரூரின் மன்னார்குடியில் உள்ள திவாகரனுக்கு சொந்தமான கல்லூரியில் இன்று 3வது நாளாக சோதனை நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்