விளம்பரத்தில் நடித்து கிடைத்த பணத்தில் உதவி: நடிகர் விஜய் சேதுபதிக்கு டாக்டர் ராமதாஸ் பாராட்டு
விளம்பரத்தில் நடித்து கிடைத்த பணத்தில் உதவி: நடிகர் விஜய் சேதுபதிக்கு டாக்டர் ராமதாஸ் பாராட்டு
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் கூறியிருப்பதாவது:–
நடிகர் விஜய் சேதுபதி விளம்பரத்தில் நடித்ததற்காக கிடைத்த ரூ.50 லட்சத்தில் ரூ.49 லட்சத்து 70 ஆயிரத்தை அரியலூர் மாவட்டத்தில் உள்ள 774 அங்கன்வாடிகள், ஹெலன் கெல்லர் செவித்திறன் குறைந்தோர் பள்ளி, தமிழ்நாடு முழுவதும் உள்ள 10 அரசு பார்வையற்றோர் பள்ளிகள், 11 செவித்திறன் குறைந்தோர் பள்ளிகள் ஆகியவற்றின் மேம்பாட்டுக்காக தமிழக அரசிடம் வழங்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.
தகுதியிருந்தும் மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் போன மாணவி அனிதாவின் நினைவாக இந்த உதவியை செய்திருக்கிறார். இந்த நல்ல மனதிற்கும், நல்ல முயற்சிக்கும் பாராட்டுகள்.
விஜய் சேதுபதியின் இந்த உதவி திரையுலகைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் நல்ல முன்னுதாரணமாக அமைய வேண்டும். விஜய் சேதுபதி எந்த நோக்கத்திற்காக இந்த உதவியை வழங்குகிறாரோ, அந்த நோக்கத்திற்காக மட்டும் அந்த நிதி பயன்படுத்தப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.