சபாநாயகர் ப.தனபால் சிங்கப்பூர் பயணம்

வங்காளதேச தலைநகர் டாக்காவில் காமன்வெல்த் நாடுகளின் 63–வது பாராளுமன்ற மாநாடு நடைபெற்றது.;

Update:2017-11-10 23:27 IST
சென்னை, 

வங்காளதேச தலைநகர் டாக்காவில் காமன்வெல்த் நாடுகளின் 63–வது பாராளுமன்ற மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் ப.தனபால் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, காமன்வெல்த் நாடுகளின் உறவை மேலும் அதிகரிக்க செய்யும் பொறுப்பும், மக்கள் தொடர்பை ஏற்படுத்தும் பொறுப்பும் மக்கள் பிரதிநிதிகளான நமக்கு உள்ளது என்று குறிப்பிட்டார்.

இந்த மாநாட்டை தொடர்ந்து சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற சில நாடுகளுக்கு ஆய்வு பயணமாக சபாநாயகர் ப.தனபால் சென்றுள்ளார்.



மேலும் செய்திகள்