தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்யும் வானிலை மையம் தகவல்
வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று (வியாழக்கிழமை) மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாத இறுதியில் தொடங்கியது. கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தென் தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு கேரள பகுதியில் ஏற்பட்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அங்கிருந்து நகர்ந்துவிட்டது. அந்தமானை ஒட்டியுள்ள மலேசிய கடல்பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுபகுதி தொடர்ந்து அதே இடத்தில் நீடிப்பதாலும், வெப்பச்சலனம் காரணமாகவும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) மழை பெய்யும்.
சென்னையை பொறுத்தவரையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. அடுத்த வானிலை மாற்றம் நிலவும் வரை கனமழைக்கு வாய்ப்பு இல்லை. வடகிழக்கு பருவமழை காலத்தில் வானிலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படும். எதையும் உறுதியாக கணித்து சொல்லிவிட முடியாது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் திருத்துறைப்பூண்டி 8 செ.மீ., நாகப்பட்டினம் 7 செ.மீ., இரணியல், செங்குன்றம், எண்ணூர், மாமல்லபுரத்தில் தலா 6 செ.மீ., வேதாரண்யம், திருவாரூர், மயிலாடி, அம்பாசமுத்திரம், சோழவரத்தில் தலா 5 செ.மீ. மழை பெய்துள்ளது.