89 இளநிலை உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
நெடுஞ்சாலைத் துறையில் 89 இளநிலை உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.;
சென்னை,
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் புதிதாக தெரிவு செய்யப்பட்டு, நெடுஞ்சாலைத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 89 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 7 பேருக்கு பணிநியமன ஆணைகளை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
நெடுஞ்சாலைத் துறையின் வலைதளமானது, உபயோகிப்பவர்களின் வசதிக்காகவும், எளிதாக பயன்படுத்தும் வகையிலும், புதிய தோற்றப் பொலிவுடன் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த மேம்படுத்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறையின் வலைதளத்தை (http://www.tnhighways.gov.in) முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடக்கிவைத்தார். இதன்மூலம் வலைதளத்தில் அளிக்கப்பட்டுள்ள தகவல்களை பொதுமக்கள் எளிதாக பார்வையிட இயலும். மேலும், புதுப்பிக்கப்பட்டுள்ள இந்த வலைதளம், மாற்றுத்திறனாளிகளும் எளிதில் பயன்படுத்தும் வகையில் ஒலிவடிவத்துடனும், எழுத்துரு அளவு மற்றும் வண்ணங்களை மாற்றும் அம்சங்களோடும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனர் ரெ.கோதண்டராமன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.