முரசொலி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டார் திமுக தலைவர் கருணாநிதி
கோடம்பாக்கம் முரசொலி அலுவலகத்தில் இருந்து திமுக தலைவர் கருணாநிதி புறப்பட்டு சென்றார்.
சென்னை,
முரசொலி பவள விழா கண்காட்சி அக்.10 வரை நடைபெற்றது. இந்நிலையில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி நாளிதழ் அலுவலகத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி வந்தார். முரசொலி அலுவலகத்தில் பவள விழா கண்காட்சியை பார்வையிட்டார். பவள விழா கண்காட்சியை பார்வையிட்ட பின் முரசொலி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். அவருடன் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், எ.வ.வேலு, பொன்முடி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
ஒராண்டாக பொதுநிகழ்ச்சியில் பங்கேற்காத கருணாநிதி முதல்முறையாக முரொலி அலுவலகம் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.