பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் புதன்கிழமை நடைபெறுகிறது. இதில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.
சென்னை,
பரபரப்பான தமிழக அரசியல் சூழலில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 11 மணிக்குக் கூடுகிறது.தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தை டெங்கு காய்ச்சல் அச்சுறுத்திவரும் நிலையில், டெங்குவைக் கட்டுப்படுத்துதல் தொடர்பான ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அதில் கலந்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.