வேல்ஸ் கல்விக்குழும வேந்தர் ஐசரிகணேஷ் பிறந்தநாள் பொன்விழா; மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து
வேல்ஸ் கல்விக்குழும வேந்தர் ஐசரி கணேசனின் பிறந்தநாள் பொன்விழாவில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை,
வேல்ஸ் கல்விக்குழுமத்தின் வெள்ளி விழா மற்றும் கல்விக்குழுமத்தின் வேந்தர் ஐசரி கே.கணேசனின் பிறந்தநாள் பொன்விழா சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
விழாவுக்கு வேல்ஸ் கல்விக்குழுமத்தின் வேந்தர் ஐசரி கே.கணேஷ் தலைமை தாங்கினார். இதில் அப்பல்லோ மருத்துவ குழுமத்தின் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
வேல்ஸ் கல்விக்குழுமத்தின் துணைத்தலைவர் பேராசிரியர் ஏ.ஜோதிமுருகன் வரவேற்புரையாற்றினார். வேல்ஸ் கல்விக்குழுமத்தின் வெள்ளி விழா மலரை டாக்டர் பிரதாப் சி.ரெட்டி வெளியிட, ஐசரி கே.கணேஷ் பெற்றுக்கொண்டார். அப்போது வேல்ஸ் கல்விக்குழுமத்தின் துணைத்தலைவர் ஆர்த்தி கணேஷ், துணைவேந்தர் பி.சுவாமிநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டாக்டர் பிரதாப் சி.ரெட்டி பேசும்போது, ‘ஐசரி கணேஷ் சாதாரண மாணவராக இருந்து தற்போது மிகச்சிறந்த தொழில் முனைவோராக, குறிப்பாக கல்வித்துறையில் முன்னேற்றம் அடைந்து இருப்பதன் மூலம் அவருடைய தாயார் நிச்சயம் பெருமைப்படுவார். ஐசரி கணேஷ் சாதாரணமாக இல்லாமல், மிகுந்த அசாதாரணமான உயர்ந்த நிலையை எட்டியுள்ளார். இவருடைய பணிகளுக்காக இந்த நாடே அவரை என்றென்றும் நினைவில் வைத்து இருக்கும். ஐசரி கணேஷ் சமுதாயத்துக்காக பெரிய அளவில் பங்களிப்பை அளித்து வருகிறார்’ என்றார்.பிறந்தநாள் பொன்விழாவில் தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ஐசரி கணேசுக்கும், அவருடைய மனைவி ஆர்த்திக்கும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.தி.மு.க. தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தியம்மாள், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் அவருடைய மனைவி ராதிகா, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தொழில் அதிபர்கள் வி.ஜி.சந்தோசம், நல்லி குப்புசாமி, தினத்தந்தி இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, தி.மு.க. வர்த்தக அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம், சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து நடிகர்கள் நாசர், விஜயகுமார், சூர்யா, கார்த்தி, ஜெயம்ரவி, பிரபுதேவா, ராஜேஷ், பொன்வண்ணன், பாக்யராஜ், பாண்டியராஜன், விவேக், கருணாஸ், பிரசன்னா, விக்ரம் பிரபு, கே.ராஜன், நடிகைகள் குட்டி பத்மினி, பூர்ணிமா பாக்யராஜ், சினேகா, டைரக்டர்கள் எஸ்.பி.முத்துராமன், பி.வாசு, ஆர்.கே.செல்வமணி, விக்கிரமன், பேரரசு, ரமேஷ்கண்ணா உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.