அனைத்து அரசு பள்ளிகளிலும் இம்மாத இறுதிக்குள் இணையதள சேவை வழங்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன்

அனைத்து அரசு பள்ளிகளிலும் இம்மாத இறுதிக்குள் இணையதள சேவை வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

Update: 2017-10-05 10:54 GMT
சென்னை

அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாடத்திட்டம் மாற்றும் பணி நடைபெற்று வருகிறது, நவம்பர் இறுதிக்குள் வரைவு பாடத்திட்டம் வெளியிடப்படும்.வரைவு பாடத்திட்டம் தொடர்பாக 15 நாள் வரை மக்கள் கருத்து கூறலாம்.

அரசுப் பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் 5 மரக்கன்றுகளை நட்டால் 5 மதிப்பெண்கள் வழங்கப்படும்.தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்... 044 - 3063 2997, 3042 7777.

அனைத்து அரசு பள்ளிகளிலும் இம்மாத இறுதிக்குள் இணையதள சேவை வழங்கப்படும். பெற்றோர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற மாணவர்கள் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்