உடலை துண்டு, துண்டாக வெட்டி வீசிய வழக்கில் துப்புதுலங்கியது தையல்காரரை கொன்ற இறைச்சி கடை ஊழியர் கைது
முகப்பேரில் ஒருவரை கொலை செய்து உடலை துண்டு, துண்டாக வெட்டி வீசிய வழக்கில் துப்புதுலங்கியது. தையல்காரரை கொன்றதாக இறைச்சி கடை ஊழியரை போலீசார் கைது செய்தனர்.;
அம்பத்தூர்,
சென்னை முகப்பேர் மேற்கு 3-வது பிளாக் பகுதியில் நொளம்பூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் கடந்த 26-ந் தேதி தலை, கை, கால்கள் வெட்டி அகற்றப்பட்ட மனித உடல் ஒன்று சாக்குப்பையில் கட்டி வீசப்பட்டு கிடந்தது. இதை கண்டெடுத்த சென்னை மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள் இதுபற்றி நொளம்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மர்மநபர்கள் அவரை கொன்று, உடல் உறுப்புகளை துண்டு, துண்டாக வெட்டி பல்வேறு இடங்களில் வீசி உள்ளனர். இதனால் கொலையானவர் யார்? என்பதை போலீசாரால் உடனே அடையாளம் காணமுடியவில்லை.
27-ந் தேதி அதே பகுதியில் உள்ள முட்புதரில் கொலையானவரின் இடது காலும், அடுத்த நாள் வலது காலும் சிக்கியது. எஞ்சிய உடல் உறுப்புகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் தொடர்புடைய கொலையாளிகளை உடனடியாக பிடிக்கும்படி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்பேரில் கூடுதல் கமிஷனர் ஜெய்ராம், இணை கமிஷனர் சந்தோஷ்குமார் ஆகியோர் மேற்பார்வையில், அண்ணாநகர் துணை கமிஷனர் சுதாகர் கண்காணிப்பில் உதவி கமிஷனர் காமீல்பாஷா, இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த கொலை வழக்கில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டபோது, முகப்பேர் மேற்கு 3-வது பிளாக் பகுதியில் உள்ள தையல் கடையும், எதிரே உள்ள இறைச்சி கடையும் கடந்த 26-ந் தேதி முதல் பூட்டிக்கிடப்பது தெரிந்தது. இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதால் தீவிரமாக விசாரித்தனர்.
அப்போது தையல் கடையில் வேலை செய்துவந்த தையல்காரர் பாபுவும், இறைச்சி கடையில் வேலை செய்துவந்த ரசூலும் காணாமல்போனது தெரிந்தது. இதுபற்றி தையல் கடையின் உரிமையாளர் முகமது ஜாகீர்உசேனிடம் போலீசார் விசாரித்தபோது, நண்பர்களான பாபுவுக்கும், முகமது ரசூலுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்ததாக கூறினார்.
இதையடுத்து தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், துண்டு, துண்டாக வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தவர் தையல்காரர் பாபு (வயது 45) என்பது தெரியவந்தது. திருவேற்காட்டை சேர்ந்த அவருக்கு கிரிஜா (43) என்ற மனைவியும், கோபி (22) என்ற மகனும், ஜனனி (19) என்ற மகளும் உள்ளனர். 17 வருடங்களாக குடும்பத்தைவிட்டு பிரிந்து முகப்பேர் பகுதியில் தனியாக தங்கியிருந்து தையல்கடையில் வேலை செய்துவந்தார்.
அந்த தையல் கடைக்கு எதிரில் உள்ள இறைச்சி கடையில் வேலை பார்க்கும் ஊழியரான பல்லாவரத்தை சேர்ந்த முகமது ரசூல் (22) என்பவர்தான் பாபுவை வெட்டிக்கொலை செய்து, உடலை துண்டு, துண்டாக வெட்டி கால்வாயில் வீசியது தெரியவந்தது.
இதையடுத்து தலைமறைவான முகமது ரசூலை போலீசார் தேடி வந்தனர். நேற்று முன்தினம் இரவு பல்லாவரம் பகுதியில் பதுங்கி இருந்த அவரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
அப்போது பாபுவை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். பின்னர் போலீசாரிடம் அவர் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-
நானும், தையல்காரர் பாபுவும் நட்புடன் பழகிவந்தோம். எனது கடையின் உரிமையாளர் வெங்கடேஷ் என்னை நம்பி கடையின் முழுபொறுப்பையும் ஒப்படைத்து இருந்தார். இரவு 8 மணிக்கு வியாபாரம் முடிந்து கடையை மூடிய பின்பு கடையின் மாடியில் தங்கிக்கொள்வேன். தினமும் பாபு வேலை முடிந்து கடைக்கு வருவார். நாங்கள் இருவரும் கடையில் மது வாங்கி வந்து அருந்துவோம்.
அப்போது பாபு என்னிடம் அடிக்கடி பணம் கேட்டு தொல்லை தருவார். அப்படித்தான் கடந்த 25-ந் தேதி இரவு போதையுடன் கடைக்கு வந்து பணம் கேட்டு தொல்லை கொடுத்தார். அன்று காலையில் இருந்தே அவர் என்னிடம் தகராறில் ஈடுபட்டார். நானும் பலமுறை அவரிடம் பொறுமையாக பேசியும் கேட்கவில்லை.
இதனால் பாபு மீது கடும் கோபத்தில் இருந்தேன். அன்று இரவு 11 மணியளவில் மீண்டும் என்னிடம் வந்து பணம் கேட்டு பிரச்சினை செய்ததால் ஆத்திரத்தில் அவரது கழுத்தில் கையால் ஓங்கி குத்தினேன். இதில் அவர் மயங்கி விழுந்தார். அவர் இறந்துவிட்டதாக நினைத்து, கடையில் ஆடு வெட்ட வைத்து இருந்த கூர்மையான வெட்டுக்கத்தியால் முதலில் அவரது 2 கைகளையும், பின்னர் அவரது தலையையும், 2 கால்களையும் தனித்தனியாக வெட்டினேன்.
போலீசாரிடம் இருந்து தப்பிக்க வெட்டி எடுத்த உடல் பாகங்களை தனித்தனியாக 6 சாக்குப்பைகளில் கட்டி வெவ்வேறு இடங்களில் வீசினேன். பின்னர் கடையை பூட்டிவிட்டு பல்லாவரத்துக்கு தப்பி வந்துவிட்டேன்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
பின்னர் அவரை கொலை நடந்த இடத்துக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு அவர் பாபுவை எப்படி கொலை செய்து உடல் உறுப்புகளை தனித்தனியாக வெட்டி எடுத்தார் என செய்து காண்பித்தார். அதை போலீசார் வீடியோவில் பதிவு செய்துகொண்டனர்.
பாபுவின் தலை மற்றும் 2 கைகளை முகப்பேர் மேற்கு, பன்னீர்நகர் குடியிருப்பு பகுதியில் முட்புதரில் வீசியதாக தெரிவித்தார். போலீசார் அங்கு சென்று அவற்றை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
கைதான முகமது ரசூல் மீது பல்லாவரம், பரங்கிமலை போலீஸ் நிலையங்களில் சங்கிலி பறிப்பு, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட 5 வழக்குகள் நிலுவையில் இருப்பதும், 2 முறை சிறை சென்றுவந்ததும் தெரிந்தது. 2 மாதத்துக்கு முன்புதான் பல்லாவரம் பகுதியில் இருந்து இந்த இறைச்சி கடைக்கு வேலைக்கு சேர்ந்துள்ளார்.
ஆடு வெட்டுவதில் கைதேர்ந்த முகமது ரசூல் ஒரு நாளைக்கு ரூ.2 ஆயிரம் வரை சம்பாதித்துள்ளார். இதனால் அவரிடம் தாராளமாக பணம் புழங்கியதால் அவரிடம் பாபு பணம் கேட்டு தொல்லை கொடுத்துள்ளார். மேலும் முகமது ரசூலுக்கு மது பழக்கத்துடன் கஞ்சா புகைக்கும் பழக்கமும் இருந்தது. இதனால் தான் கஞ்சா போதையில் பாபு மயங்கி விழுந்ததும், அவரது உடல் உறுப்புகளை தனித்தனியாக வெட்டி உள்ளார் எனவும் போலீசார் தெரிவித்தனர்.