‘நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் பள்ளி மாணவிகள் 3 மணி நேரம் சாலை மறியல்
‘நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் பள்ளி மாணவிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.;
சென்னை,
‘நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் நேற்று பள்ளி மாணவிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைப்போல புறநகர் பகுதிகளிலும் தீவிர போராட்டங்கள் நடந்தன.
‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், அரியலூர் மாணவி அனிதா தற்கொலைக்குப்பின் இந்த போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. பள்ளி-கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் இந்த போராட்டக்களத்தில் குதித்து உள்ளனர்.
இதை ஒடுக்க அரசும், போலீசாரும் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். சென்னையில் இத்தகைய போராட்டங்கள் அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில கல்லூரிகளுக்கு விடுமுறையும் விடப்பட்டு உள்ளது. எனினும் ‘நீட்’ எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.
விடுமுறை தினமான நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்க வந்த மாணவிகள் சுமார் 60 பேர், 12.30 மணியளவில் லயோலா கல்லூரி பின்புறம் உள்ள புஷ்பாநகர் பிரதான சாலைக்கு சென்று திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
ஒருவருக்கொருவர் கைகளை கோர்த்து சாலையின் இரு புறமும் மனிதச்சங்கிலி போலவும் நின்றனர். நீட் தேர்வுக்கு எதிரான வாசகங்கள் மற்றும் அனிதாவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் வகையிலான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்த அவர்கள், ‘நீட்’ தேர்வுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் இணை கமிஷனர் மனோகரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் பள்ளி தலைமை ஆசிரியை புண்ணியம்மாளும் அங்கு வந்து மாணவிகளை கலைந்து போகுமாறு வலியுறுத்தினார்.
‘உங்களுக்கு டி.சி. (மாற்று சான்றிதழ்) தந்துவிடுவோம்’, ‘ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என மாணவிகளுக்கு பல்வேறு எச்சரிக்கைகளை அவர் விடுத்தார். ஆனால் இந்த எச்சரிக்கை மற்றும் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டு வராத மாணவிகள், தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
எனினும் ஒரு கட்டத்தில் புஷ்பாநகர் பிரதான சாலையில் இருந்து கலைந்து சென்ற மாணவிகள், பள்ளி அமைந்திருக்கும் ராஜாஜி தெருவில் அமர்ந்து மீண்டும் மறியல் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் மாணவிகளின் பெற்றோரும் போராட்டக்களத்துக்கு வந்தனர்.
அவர்கள் முதலில் தலைமை ஆசிரியரிடமும், பின்னர் மாணவிகளிடமும் பேசினர். இதனால் பிற்பகல் சுமார் 3.30 மணியளவில் மாணவிகள் அனைவரும் அங்கிருந்து எழுந்து, பள்ளி வளாகத்தில் குவிந்தனர். பின்னர் அங்கேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து பெருநகர சென்னை மாநகராட்சி தலைமை கல்வி அதிகாரி ரஞ்சனி, கூடுதல் கல்வி அதிகாரி முனியன் ஆகியோர் பள்ளிக்கு வந்து மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டத்தை தொடர்ந்து மாணவிகள் தங்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டனர். இதன்மூலம் சுமார் 4.30 மணியளவில் போராட்டம் முடிவுக்கு வந்தது.
முன்னதாக புஷ்பாநகர் பிரதான சாலையில் போராட்டம் நடந்தபோது, அதில் பங்கேற்ற மாணவி ஒருவர் வெயிலின் தாக்கத்தால் திடீரென மயக்கம் அடைந்தார். உடனே சக மாணவிகளும், போலீசாரும் அந்த மாணவிக்கு தண்ணீர் கொடுத்து, முதலுதவி சிகிச்சை செய்தனர். இதையடுத்து மாணவி உடல்நிலை சீரானது.
எனினும் மாணவிகளின் பாதுகாப்பு கருதி ‘108’ ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அந்த பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த மாணவிகளுக்கு ஆதரவாக போராடிய 5 கல்லூரி மாணவர்களை போலீசார் பிடித்து சென்றதாக கூறப்படுகிறது.
இந்த போராட்டத்தால் புஷ்பாநகர் சாலை மற்றும் ராஜாஜி தெரு சாலைகளில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே மாணவி அனிதா சாவுக்கு நீதி கேட்டும், ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும் எண்ணூர் பஜாரில் மாணவர் அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் எண்ணூர் பகுதியை சேர்ந்த பள்ளி-கல்லூரி மாணவர்கள், முன்னாள் நகராட்சி தலைவர் திருசங்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கவிஅமுதன் உள்பட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதைப்போல பெரம்பூரில் உள்ள சென்னை மாநகராட்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சுமார் 100 பேர், நேற்று மாலை 5.30 மணியளவில் திடீரென பெரம்பூர் முரசொலிமாறன் மேம்பாலம் பூங்கா எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராகவும், ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரியும் அவர்கள் கோஷமிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் கூடுதல் கமிஷனர் ஜெயராமன், இணை கமிஷனர்கள் சந்தோஷ்குமார், சுதாகர், துணை கமிஷனர்கள் செல்வக்குமார், ஷியாமளா தேவி, ராஜேந்திரன், கலைச்செல்வன் உள்பட ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பெண் போலீஸ் ஒருவர், மறியலில் ஈடுபட்ட மாணவி ஒருவரின் துப்பட்டாவை பிடித்து இழுத்து அப்புறப்படுத்த முயன்றதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவிகள், அந்த பெண் போலீசை கண்டித்து கோஷமிட்டனர்.
எனினும் பின்னர் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையால் அமைதியடைந்த மாணவிகள், மறியலை கைவிட்டுவிட்டு முரசொலி மாறன் பூங்கா நடைபாதையில் அமர்ந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளும் அங்கு குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே போராட் டத்தை தூண்டியதாக இந்திய மாணவர் சங்கத்தினர் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.