போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அடுத்த மாதம் ஓய்வூதிய பணப்பலன் ஐகோர்ட்டில், தமிழக அரசு தகவல்
ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு அடுத்த மாதம் 7-ந்தேதிக்குள் ஓய்வூதிய பணப்பலன் ரூ.1,136 கோடி வழங்கப்படும் என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு, பல ஆண்டுகளாக ஓய்வூதிய பணப்பலன்கள் வழங்கப்படவில்லை. ஓய்வூதிய பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மே மாதம் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஐகோர்ட்டு மதுரை கிளையில் வக்கீல் ஒருவர் இந்த போராட்டத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.வி.முரளிதரன், என்.சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘போராட்டத்தை கைவிட்டு போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் ‘எஸ்மா’ சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து ஓய்வுபெற்ற 82 வயது போக்குவரத்து தொழிலாளர் மதுரை, செக்காணூரணியை சேர்ந்த மாயாண்டி சேர்வை ஒரு கடிதம் அனுப்பினார். உத்தரவிட்ட நீதிபதிகளுக்கு எழுதப்பட்ட இந்த கடிதத்தில், ‘ஓய்வுபெற்று 24 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எனக்கு ஓய்வூதியம் கிடைக்கவில்லை. என்னைப்போல ஆயிரக்கணக்கான ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் பணம் இல்லாமல், பசியும், பட்டினியுடன் வாழமுடியாமல் தவித்து வருகின்றனர். இதற்காக போராட்டம் நடத்திய தொழிலாளர்கள் மீது ‘எஸ்மா’ சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கிறீர்கள். ஆனால், ஓய்வூதிய பலன் கிடைக்காமல் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் பலர் உள்ளனர்’ என்று கூறியிருந்தார்.
நீதிபதிகள் இந்த கடிதத்தை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜிக்கு அனுப்பினர். அந்த கடிதத்தையே மனுவாக கருதி, சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், எம்.கோவிந்தராஜ் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ‘ஓய்வுபெற்ற போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய ஓய்வூதிய பணப்பலன் ரூ.1,136 கோடி அடுத்த மாதம் 7-ந்தேதிக்குள் வழங்கப்படும். பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகை உள்பட சுமார் ரூ.5 ஆயிரம் கோடியை எப்படி வழங்குவது என்பது குறித்து அரசு திட்ட அறிக்கை தயாரிக்க உள்ளது. இந்த அறிக்கையை வருகிற 7-ந்தேதி ஐகோர்ட்டில் தாக்கல் செய்கிறேன்’ என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், ‘தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய தொகையைபோல, அரசு பஸ் விபத்துகளில் பாதிக்கப்பட்டோருக்கு சுமார் ரூ.300 கோடி வரை இழப்பீடாக வழங்கவேண்டியதுள்ளது. இந்த பணம் எப்போது வழங்கப்படும்?’ என்று கேள்வி எழுப்பியதுடன், இந்த தொகையை வழங்குவது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று அட்வகேட் ஜெனரலுக்கு உத்தரவிட்டனர். விசாரணையை அடுத்த மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.