‘டிஜிலாக்கர்’ மூலம் அசல் ஓட்டுனர் உரிமம்:அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை
நம் நாட்டில் ஆங்காங்கே நடைபெறும் போக்குவரத்து விதிமுறை மீறல்கள் மற்றும் ஆவணங்களை பதிவு செய்வதில் நடக்கும் முறைகேடுகளை தடுக்கவே, புதிய மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது.
சென்னை,
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

மத்திய அரசும், மத்திய போக்குவரத்து துறையும் இணைந்து ஒரு செயலியை உருவாக்கியுள்ளனர். இதனை டிஜிலாக்கர் (டிஜிட்டல் லாக்கர்) என கூறலாம். மத்திய அரசால் உருவாக்கப்பட்ட இந்த டிஜிலாக்கருக்கு அங்கீகாரம் உண்டு. இதில் அசல் ஆவணங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
எனவே, வாகன ஓட்டுனர், அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்காமல் டிஜிலாக்கர் மூலம் அசல் ஓட்டுனர் உரிமத்திற்கான ஆவணப்பதிவை காட்டும் போது போக்குவரத்து காவல்துறை அதனை ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.
மேலும் தமிழக போக்குவரத்து காவல்துறை வாகன ஓட்டுனர்களிடம் அசல் உரிமம் மற்றும் வாகனம் தொடர்பான ஆவணங்களை பரிசோதிக்கும் போது அவர்கள் கூறும் காரணம் சரியாக இருந்தால், விதி மீறல்களில் ஈடுபடாமல் ஓட்டி வந்திருந்தால் அவர்கள் மீது தேவையற்ற அபராதமோ அல்லது கடுமையான நடவடிக்கையோ எடுக்கக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும் என த.மா.கா. சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.