முன்னாள் அமைச்சர் பொன்முடியை விடுவித்தது செல்லாது ஐகோர்ட்டு உத்தரவு
முன்னாள் அமைச்சர் பொன்முடியை விடுவித்து கீழ் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
3 ஆயிரத்து 600 சதுர அடி அரசு நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடியை விடுவித்து கீழ் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. அப்போது இவர், தன் அதிகாரத்தை பயன்படுத்தி, சைதாப்பேட்டையில் உள்ள 3 ஆயிரத்து 600 சதுர அடி அரசு நிலத்தை அபகரித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அந்த நிலத்தில் குடியிருந்த கண்ணன் என்பவரை வெளியேற்றி, அவர் தன் மாமியார் சரஸ்வதிக்கு நிலத்தை விற்பனை செய்ததாக போலி ஆவணங்கள் தயாரித்து, அதில் வீடு கட்டியதாகவும், இதற்கு அரசு அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாகவும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
அதேபோல பொன்முடி மீது தொடரப்பட்ட வருமானத்து அதிகமாக சொத்து சேர்த்த வழக்கிலும், சைதாப்பேட்டை நிலத்தை சேர்த்து இருந்தனர். இந்த நிலையில், இந்த 2 வழக்குகளின் குற்றப்பத்திரிகைகளையும் போலீசார் தாக்கல் செய்தனர். இதில், சைதாப்பேட்டை நிலம் தொடர்பான வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை. அதனால் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று பொன்முடி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த செசன்சு கோர்ட்டு, ஒரே குற்றச்சாட்டுக்கு இரு வழக்குகள் தொடர முடியாது. ஏற்கனவே சொத்து குவிப்பு வழக்கில் சைதாப்பேட்டை சொத்தை கணக்கில் காட்டியுள்ளனர். ஆனால், அந்த வழக்கில் இருந்து பொன்முடியை, சம்பந்தப்பட்ட கோர்ட்டு விடுவித்துவிட்டது. அதனால், இந்த வழக்கில் இருந்தும் அவர் விடுவிக்கப்படுகிறார் என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், பொன்முடி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது ஒரு வழக்கும், 3 ஆயிரத்து 600 சதுர அடி நிலத்தை அபகரித்து மோசடி செய்ததாக மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டன. சொத்து குவிப்பு வழக்கில் இருந்து பொன்முடி விடுவிக்கப்பட்டாலும், அதே காரணத்தை கூறி அவரை அரசு நிலத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட மோசடி வழக்கில் இருந்தும் விடுவித்து செசன்சு கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு செல்லாது.
எனவே, கீழ் கோர்ட்டு உத்தரவை ரத்து செய்கிறேன். இந்த வழக்கில் பொன்முடி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதால், அவர் இந்த வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.