எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மை இழந்து விட்டது: சுப்ரமணியன் சுவாமி

எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மை இழந்து விட்டது என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

Update: 2017-09-05 14:17 GMT
சென்னை,

அதிமுகவில் அரசியல் குழப்பம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், பாஜக மூத்த தலைவரும் எம்.பியுமான சுப்ரமணியன் சுவாமி, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை இழந்து விட்டார்.

அவர் தற்போது சசிகலாவைத் தொடர்பு கொண்டு புதிய முதல்வர் வேட்பாளரை அறிவிக்கக் கோர வேண்டும், அப்போதுதான் அதிமுக அரசு தொடர முடியும் இல்லையெனில் திமுக உள்ளே நுழைந்து விடும்”  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்