‘ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச்’ தோல்விக்கு வெப்ப கவசத்தின் எடை கூடுதல் காரணமா? இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு

‘ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச்’ செயற்கைகோள் திட்டம் தோல்வி அடைந்ததற்கு வெப்ப கவசத்தின் எடை கூடுதலாக 1 டன் இருந்ததுதான் காரணமா என்பது பற்றி இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு செய்கின்றனர்.

Update: 2017-09-03 00:00 GMT
சென்னை

‘ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச்’ செயற்கைகோள் திட்டம் தோல்வி அடைந்ததற்கு வெப்ப கவசத்தின் எடை கூடுதலாக 1 டன் இருந்ததுதான் காரணமா என்பது பற்றி இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு செய்கின்றனர்.

செயற்கை கோள் திட்டம் தோல்வி

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து வாகனங்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் கடல் ஆராய்ச்சிக்கான ‘ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச்’ செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் கடந்த 31-ந் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.
ஆனால் தொழில் நுட்ப கோளாறால், ‘ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச்’ செயற்கைகோளை பூமியின் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தும் திட்டம் தோல்வியில் முடிந்தது.

கூண்டுக்குள் அடைபட்ட நிலை ஏற்பட்டுவிட்டது

இந்த தோல்விக் கான காரண த்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) விஞ்ஞானிகள் ஆரா ய்ந்து வருகிறார்கள். இது தொடர்பாக விஞ்ஞானிகள் கூறிய தாவது:-
‘ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச்’ செயற்கைகோளை பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தியது. அதற்கான அனைத்து நிலைகளிலும் பணிகள் ஒழுங்காக நடந்தன.
செயற்கைகோள் சேதம் அடையாமல் இருப்பதற்காக அதனை சுற்றி அமைக்கப் பட்டிருந்த வெப்ப கவசம் 2-வது நிலையிலேயே படிப் படியாக திறந்து 4-வது நிலையில் முற்றிலுமாக திறந்து செயற்கைகோளை ராக்கெட்டின் மேல்பகுதியில் இருந்து புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தும்.
ஆனால் வெப்ப கவசம் முறையாக திறக்காததால் செயற்கைகோளுக்கு கூண்டுக் குள் அடைபட்ட நிலை ஏற்பட்டுவிட்டது.

இதனால் ‘ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச்’ செயற்கைகோள் திட்டம் தோல்வியை தழுவி உள்ளது.

1 டன் எடை அதிகம்

வெப்ப கவசத்தின் எடை கூடுதலாக 1 டன் அளவுக்கு இருந்ததால், இந்த திட்டம் தோல்வியை தழுவியதா என்ற அடிப்படையில் ஆய்வு செய்து வருகிறோம். இதற்காக ஒரு குழு அமைத்து, ஆய்வுப்பணி நடந்து வருகிறது. ஓரிரு நாட்களில் இதுகுறித்து முழுமையான தகவல் தெரியவரும். அதன் அடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பிற பணிகள் பாதிப்பு இல்லை

‘ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச்’ செயற்கைகோள் திட்டம் தோல்வி கண்டுள்ளதால் பிறபணிகள் எதுவும் பாதிக் கப்படவில்லை. குறிப்பாக இந்த ஆண்டு விண்ணில் செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள ராக் கெட்டுகள் மற்றும் செயற்கைகோள்கள் முறையாக விண்ணில் செலுத்தப்படும். அதற் கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

மேலும் செய்திகள்