அனிதா தற்கொலை வருத்தமளிக்கிறது தம்பிதுரை
அனிதா தற்கொலை வருத்தமளிக்கிறது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.
சென்னை,
‘நீட்’ தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து போராடிய மாணவி, தனது மருத்துவ படிப்பு கனவு தகர்ந்ததால் தற்கொலை செய்து கொண்டார். மாணவி அனிதாவின் தற்கொலைக்கு மத்திய- மாநில அரசுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
அனிதா தற்கொலை வருத்தமளிக்கிறது. தமிழக அரசு, நீட் தேர்வை ஒருபோதும் ஏற்காது. நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசை, தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும். மத்திய அரசு கொண்டுவரும் அனைத்துத்திட்டங்களையும் அதிமுக ஆதரிக்கிறது என்பது தவறானது.
இவ்வாறு அவர் கூறினார்.