மெரினாவில் கனமழை : ஜெயலலிதா நினைவிடத்தில் காத்திருந்த எம்எல்ஏக்கள், தொண்டர்கள் கலைந்து சென்றனர்
மெரினாவில் கனமழை பெய்ததால் ஜெயலலிதா நினைவிடத்தில் காத்திருந்த எம்எல்ஏக்கள், தொண்டர்கள் கலைந்து சென்றனர்.
சென்னை,
அதிமுக அணிகள் இணைவது குறித்த அறிவிப்பை இரு அணியினரும் ஜெயலலிதா நினைவிடத்தில் அறிவிப்பார்கள் என தகவல் வெளியாகின. இரு அணிகள் இணைவது குறித்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி அணியினர் தரப்பில் ஆலோசனை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் அதிமுக இரு அணிகள் இணைய ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு அணியை சேர்ந்த கே.பி. முனுசாமி எதிர்ப்பு தெரிவிப்பதாக தகவல் வெளியாகின. ஓபிஎஸ் அணியினரின் 2 நிபந்தனைகள் 3 நிபந்தனைகளாக உயர்ந்ததால் அதிமுக அணிகள் இணைப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அணிகள் இணைப்பு குறித்து முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களுடன் நடத்திய ஆலோசனை நிறைவு பெற்றது.
சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். அணிகள் இணைப்பு குறித்து பன்னீர்செல்வம் தெரிவிப்பார் என பி.ஹெச்.பாண்டியன் கூறியுள்ளார்.
இந்தநிலையில் சென்னை மெரினாவில் கனமழை பெய்ததால் ஜெயலலிதா நினைவிடத்தில் காத்திருந்த எம்எல்ஏக்கள், தொண்டர்கள் கலைந்து சென்றனர்.