”இனி ஒரு சிலைசெய்வோம் அரசுக்கு அப்பால் என் அப்பா” சிவாஜி சிலை குறித்து கமல் டுவிட்டரில் கருத்து

நடிகர் சிவாஜி சிலை குறித்து கமலாஹசன் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

Update: 2017-08-03 16:49 GMT
சென்னை,

மெரீனா கடற்கரையில் காமராஜர் சாலையும் ராதா கிருஷ்ணன் சாலையும்  சந்திக்கும் பகுதியில்  சிவாஜிகணேசன் இடுப்பில் கையை வைத்தபடி சுமார் 8 அடி உயரத்தில் கம்பீர சிலைலையை  அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி 2006-ம் ஆண்டு ஜூலை 12-ந்தேதி திறந்து வைத்தார்.

இந்நிலையில் நேற்று  நள்ளிரவு 1 மணிக்கு மெரீனா கடற்கரை காமராஜர் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பிறகு சுமார் 50 ஊழியர்கள் சிவாஜி சிலையை  இரவோடு இரவாக அகற்றத் தொடங்கினார்கள்.

4.30 மணிக்கு ராட்சத கிரேன் கொண்டு வரப்பட்டு, சிவாஜி சிலையை லாரியில் ஏற்றினார்கள். மணிமண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில் இது குறித்து நடிகர் கமலாஹசன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

சிவாஜி ரசிகர் மனதிலும் நடிக்க நினைத்த தமிழன்,மனதிலும் பதிந்தவர்.  இனி ஒரு சிலைசெய்வோம் அதை எந்நாளும் காப்போம் அரசுக்கு அப்பால் என் அப்பா என கமலஹாசன் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்