மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

Update: 2017-07-18 21:45 GMT

சென்னை,

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 20–ந் தேதி(நாளை) காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள ‘கலைஞர் அரங்கத்தில்’ நடைபெறும்.

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த கூட்டத்தில் தி.மு.க. கட்சி பத்திரிகையான முரசொலி பவள விழா குறித்தும், நீட் தேர்வு குறித்தும் விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்