வெங்கையா நாயுடுவுக்கு ஆதரவு கேட்டு பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு
எடப்பாடி பழனிசாமியுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி வெங்கையா நாயுடுவுக்கு ஆதரவு கேட்டு உள்ளார்.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு அளித்ததற்காக தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார். மேலும் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வெங்கையா நாயுடுவுக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வெங்கையா நாயுடுவுக்கு, எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.