முதல்-அமைச்சர் அளிக்கும் வாக்குறுதிகள் உறுதிமொழி குழுவுக்கு அனுப்பப்படுமா? மு.க.ஸ்டாலின் கேள்வி
முதல்-அமைச்சர் அளிக்கும் வாக்குறுதிகள் உறுதிமொழி குழுவுக்கு அனுப்பப்படுமா? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.;
சென்னை,
பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்-அமைச்சர் அளிக்கும் வாக்குறுதிகள் உறுதிமொழி குழுவுக்கு அனுப்பப்படுமா? என்று சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
தமிழக சட்டசபையில் நேற்று பேரவை விதி எண் 110-ன் கீழ், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை தொடர்பான புதிய அறிவிப்புகளை வெளியிட்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அவர் பேசி முடித்ததும், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பேரவையின் கேள்வி நேரங்களில் சொல்லப்படக்கூடிய பதில்கள், மானிய கோரிக்கைகளில் அமைச்சர்கள் சொல்லக்கூடிய வாக்குறுதிகள், உறுதிமொழிகள் எல்லாம் முறையாக உறுதிமொழி குழுவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால், 110 விதியை பயன்படுத்தி இங்கு படிக்கப்படக்கூடிய உறுதிமொழிகள், வாக்குறுதிகள் ஆகியவை உறுதிமொழி குழுவுக்கு அனுப்பப்படுவதில்லை. நான் ஏற்கனவே இதே அவையில் பலமுறை 110 விதியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலையை ஒரு வெள்ளை அறிக்கையாக அவையில் வைக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் எழுப்பிக்கொண்டிருக்கிறேன்.
ஆகவே, நான் கேட்க விரும்புவது, வெள்ளை அறிக்கையை வைக்க முன்வரவில்லை என்று சொன்னாலும், உறுதிமொழி குழுவுக்கு அனுப்பி வைக்கவாவது இந்த அரசு முன்வருமா என்பதை முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
திட்டங்கள் நிறைவேற்றப்படும்
அதற்கு பதில் அளித்து பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அரசு 110 விதியின் கீழ் அறிவித்த அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும். அனுமதிக்காக சில திட்டங்கள் வேண்டுமானால் நிலுவையில் இருக்கலாம். எனவே, சந்தேகப்பட வேண்டாம். அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும்” என்றார்.
தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின், “நிறைவேற்றப்பட்டதையும் நீங்கள் அனுப்புங்கள் என்றுதான் நாங்கள் கேட்கிறோம். நீங்கள் நிறைவேற்றினீர்களா? அல்லது நிறைவேற்றவில்லையா? என்ற பிரச்சினைக்குள் நான் போகவில்லை. உறுதிமொழி குழுவுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்ற அந்த கோரிக்கையைத்தான் நான் எடுத்து வைத்திருக்கிறேன்” என்று கூறினார்.