ஓசூர், நெய்வேலியில் இருந்து சிறிய விமானங்கள் இயக்க மத்திய அரசு சம்மதம்
சட்டசபையில் எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் (காட்பாடி தொகுதி), ‘‘வேலூர் அப்துல்லாபுரத்தில் குட்டி விமான இறங்குதளம் உள்ளது.;
சென்னை,
ஓடு பாதை நீளத்தை அதிகரிக்க அரசு நிலம் கையகப்படுத்த வேண்டும்’’ என்றார்.
அதற்கு பதில் அளித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ‘‘கடந்த 2 வாரத்திற்கு முன்பு மத்திய சிவில் போக்குவரத்து துறை அதிகாரிகள், முதல்–அமைச்சரை வந்து சந்தித்து பேசினார்கள். அப்போது, தமிழ்நாட்டில் 6 இடங்களில் சிறிய விமான சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டது. சேலம், ஓசூர், நெய்வேலி ஆகிய 3 இடங்களில் சிறிய விமான சேவையை தொடங்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.
இந்த விமானங்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு, ரூ.2,500–ஐவிட கட்டணம் குறைவாக இருக்க வேண்டும் என்று விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களுக்கு சிறிய விமான சேவை தொடங்கப்படும்’’ என்றார்.
தொடர்ந்து பேசிய துரைமுருகன், ‘‘வேலூரில் விமான ஓடுதளம் ஏற்கனவே உள்ளது. அதை விரிவாக்கம் செய்தாலே பெரிய விமானங்கள் வந்து இறங்கலாம்’’ என்றார்.
பின்னர் பேசிய அமைச்சர் பி.தங்கமணி, ‘‘வணிக ரீதியிலான ஆய்வுகள் நடத்தப்படுகிறது. அதன்படி இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்க்கட்சி துணை தலைவரின் கோரிக்கை முதல்–அமைச்சரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்படும்’’ என்றார்.