டி.டி.வி.தினகரனுடன், மேலும் 2 எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு ஆதரவு எண்ணிக்கை 34 ஆக உயர்வு

டி.டி.வி.தினகரனுடன், மேலும் 2 எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர் ஆதரவு எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.;

Update:2017-06-15 02:30 IST
சென்னை,

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் கடந்த 2–ந் தேதி வெளியே வந்தார்..

கட்சி பணிகளில் இருந்து ஒதுங்கி இருக்கப்போவதாகவும், 60 நாட்கள் காலக்கெடுவுக்குள் அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணையவேண்டும் என்றும் காலக்கெடு விடுத்தார். இதனையடுத்து தனது ஆதரவாளர்களுடன் சென்னை பெசன்ட்நகரில் உள்ள தனது வீட்டில் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தார்.

அவரை செந்தில்பாலாஜி, பழனியப்பன், தோப்பு வெங்கடாச்சலம் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். மேலும் இன்பதுரை (ராதாபுரம்), ராஜன்செல்லப்பா (மதுரை) உள்பட 32 எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி.தினகரனை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

இந்த நிலையில் அம்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. அலெக்சாண்டர், அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி ஆகியோர் சென்னை பெசன்ட்நகர் இல்லத்துக்கு நேற்று சென்று, டி.டி.வி.தினகரனை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். இதன்மூலம் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்