முதல்–அமைச்சருடன் சபாநாயகர் சந்திப்பு; சட்டசபை கூட்டத்தொடர் பற்றி ஆலோசனை
சென்னை தலைமை செயலகத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சபாநாயகர் ப.தனபால் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நீடித்தது.;
சென்னை,
சட்டசபை கூட்டத்தொடர் 14–ந் தேதி தொடங்கும் என்று கவர்னரிடம் இருந்து அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானது. அதை தொடர்ந்து முதல்–அமைச்சர் மற்றும் சபாநாயகர் சந்திப்பு நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.