மருத்துவ கல்வி இயக்குனரகத்தின் சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
அரசு மருத்துவர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு தொடர்பான மருத்துவ கல்வி இயக்குனரகத்தின் சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
அரசு பணியில் உள்ள மருத்துவர்கள் நலச்சங்க செயலாளர் டாக்டர் ஜி.சுரேஷ், சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில், அரசு பணியில் உள்ள மருத்துவர்களுக்கான பணி இடமாறுதல் கலந்தாய்வை நடத்த மருத்துவ கல்வி இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டார். அரசு பணியில் உள்ள மருத்துவர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு நடத்தும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து 20.11.2007 அன்று வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
சட்டவிரோதம்
இந்த நிலையில் 24.5.2017 அன்று மருத்துவ கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள ஒரு சுற்றறிக்கையில், அரசு பணியில் இருந்து கொண்டு மருத்துவ மேற்படிப்பு படித்து வரும் மருத்துவர்கள் இறுதி ஆண்டு தேர்வை எழுதி முடிவுக்காக காத்திருக்கும் பட்சத்தில் அவர்களும் இந்த கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது.
பணியில் உள்ள மருத்துவர்களுக்கு தான் அரசு உத்தரவுப்படி இடமாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அதைத் தவிர்த்து இறுதி ஆண்டு தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மருத்துவ மேற்படிப்பு மாணவர்களையும் இந்த கலந்தாய்வில் பங்கேற்க செய்தால் அது பணியில் உள்ள மூத்த சிறப்பு மருத்துவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே, அரசு மருத்துவர்களுக்கான கலந்தாய்வில் ஏற்கனவே என்ன விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறதோ அதை மட்டுமே கடைபிடிக்க உத்தரவிட வேண்டும். 24.05.17 அன்று மருத்துவ கல்வி இயக்குனரகம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். ஏற்கனவே பணியில் உள்ள முதுநிலை பட்டம் பெற்ற மூத்த சிறப்பு மருத்துவர்களுக்கு கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இடைக்கால தடை
இந்த மனு நீதிபதி டி.ராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் தங்கசிவன் ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி, அரசு பணியில் இருந்து கொண்டு மருத்துவ மேற்படிப்பு படித்து வரும் மருத்துவர்கள் இறுதி ஆண்டு தேர்வை எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் பட்சத்தில் அவர்களும் இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று மருத்துவ கல்வி இயக்குனரகம் 24.5.2017 அன்று பிறப்பித்த சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
மேலும், இடமாறுதல் கலந்தாய்வை 2007-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை பின்பற்றி நடத்த வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.