மக்களுக்கும், நாட்டுக்கும் சேவை செய்ய கருணாநிதி நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் விஜயகாந்த் வாழ்த்து
மக்களுக்கும், நாட்டுக்கும் சேவை செய்ய கருணாநிதி நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்று விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
94–வது பிறந்தநாள், சட்டப்பேரவையின் 60–வது ஆண்டு விழா கொண்டாடும் கருணாநிதிக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
இந்தியாவிலேயே மிக மூத்த அரசியல் தலைவர் என்கிற பெருமையை, கருணாநிதி மட்டுமே பெற்று இருக்கிறார். அதுபோல் எத்தனையோ, அரசியல்வாதிகள் இருந்தாலும் கருணாநிதியுடைய அரசியல் அனுபவமும், அரசியல் தலைவர்களுடைய வயதும் சமமாக இருக்கிறது.
இன்னும் பல ஆண்டுகள் நீண்ட ஆயுளுடனும், உடல் ஆரோக்கியத்துடனும் வாழ்ந்து மக்களுக்கும், நாட்டுக்கும் சேவை செய்ய வேண்டும். உங்களுடைய பிறந்தநாள் விழாவும், சட்டப்பேரவையின் வைரவிழாவும் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.