மீண்டும் குழப்பம் தினகரன் மீண்டும் கட்சிப்பணி அமைச்சர்கள் இடையே கருத்து வேறுபாடு
தினகரன் மீண்டும் கட்சிப்பணிற்றுவேன் என கூறி உள்ளதால் அ.தி.மு.க. அம்மா அணியில் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. அமைச்சர்கள் இடையே கருத்து வேறுபாடும் ஏற்பட்டு உள்ளது.;
சென்னை,
இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதான அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஜாமீனில் விடுதலையாகியுள்ளார்.
டெல்லியில் இருந்து இன்று சென்னை திரும்பும் அவர் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளார்.திகார் சிறையில் இருந்து வெளியில் வந்த தினகரனை அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அ.தி.மு.க.அம்மா அணியை சேர்ந்த எம்.பி.க் கள் வேணுகோபால் (திருவள்ளூர்), நாகராஜ் (கோவை), சேவல் ஏழுமலை (ஆரணி), முன்னாள் அமைச்சர்கள் தோப்பு வெங்கடாசலம், பழனியப்பன், செந்தில் பாலாஜி, எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல், தங்க தமிழ் செல்வன், பரமக்குடி கென்னடி, அரூர் முருகன், ஆம்பூர் பாலசுப்பிரமணி, சாத்தூர் சுப்பிரமணி உள்ளிட்ட 10 பேர் டெல்லி சென்று டி.டி.வி.தினகரனை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி, முன்னாள் எம்.பி. திருப்பூர் சிவசாமியும் தின கரனை சந்தித்தனர். இதனால் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தினகரன் விடுதலையானது குறித்து கருத்து தெரிவித்த ஜெயக்குமார் தினகரனை சந்திக்கும் எண்ணம் எதுவும் இல்லை. எடப்பாடி பழனிசாமி அரசை அவர் இயக்குவதாக கூறுவது தவறு என்று கூறி யுள்ளார். அமைச்சர் செங் கோட்டை யன் கூறும் போது, தினகரன் கட்சிப்பணியாற்றுவது பற்றி எடப்பாடி பழனிசாமியே முடிவு செய்வார் என்று தெரிவித்துள்ளார். இவரது கருத்தும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே உள்ளது.
அமைச்சர் எஸ்.பி.வேலு மணியும் எடப்பாடிக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்துள்ளார். தினகரன் கட்சி தொடர்வது பற்றி முதல்-அமைச்சர் தலைமையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டியே முடிவு செய்வோம் என்று கூறியுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் அ.தி.மு.க. அம்மா அணியின் நிலை குறித்தும் எடப்பாடி பழனிசாமியே முடிவு செய் வார் என்றும் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தினகரனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
தினகரன் மீண்டும் அரசியல் பிரவேசம் செய்திருப்பது தொடர்பாக அமைச்சர்களுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் இந்த கருத்து மோதல் அ.தி.மு.க. அம்மா அணியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே 2 அணிகளாக அ.தி.மு.க. உடைந்திருக்கும் நிலையில் தினகரனின் வருகையால் ஏற்பட்டிருக்கும் இந்த குழப்பம் அ.தி.மு.க.வினர் மத்தியில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.