சென்னை சில்க்ஸ் தீ விபத்து: கட்டிடத்திற்குள் சிக்கிய வைரம், தங்கம், வெள்ளி எவ்வளவு?

தி.நகரில் சென்னை சில்க்ஸ் தீ விபத்தில் ரூ. 300 கோடிக்கும் மேல் சேதம் ஏற்பட்டு உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.

Update: 2017-06-01 13:11 GMT
சென்னை,

சென்னையில் பிரபல ஜவுளிக்கடையான சென்னை சில்க்சின் 7 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

17 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த பயங்கர தீவிபத்தில் கடையில் இருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள துணிமணிகள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமாயின. என்றாலும் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர்ச்சேதமோ அல்லது காயமோ ஏற்படவில்லை. தி.நகரில் சென்னை சில்க்ஸ் தீ விபத்தில் ரூ. 300 கோடிக்கும் மேல் சேதம் ஏற்பட்டு உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது. 

தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் தோராயமாக 400 கிலோ தங்கம், 2000 கிலோ வெள்ளி இருந்து இருக்கலாம். ரூ. 20 கோடி மதிப்புடைய வைரம் மற்றும் தங்க நகைகள் இருந்து இருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

 கடுமையான வெப்பம், புகை காரணமாக பெட்டிகளை உள்ளே இருந்து எடுக்க முடியவில்லை. விபத்தின் போது 150 டிகிரிக்கு மேல் வெப்பம் ஏற்பட்டதால் தங்கம், வெள்ளி நகைகள் சேதமடைந்து இருக்கும் என நகை தயாரிப்பார்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

தீவிபத்து ஏற்பட்ட கடையில் இருந்த பொருட்களுக்கும், நகைகளுக்கும் காப்பீடு செய்யப்பட்டு உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்